கலை, அறிவியல் கல்லுாரி 'அட்மிஷன்' விண்ணப்ப பதிவு இன்று துவக்கம் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Monday 26 July 2021

கலை, அறிவியல் கல்லுாரி 'அட்மிஷன்' விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்குகிறது. வரும் 10ம் தேதி வரை விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல் ஆன்லைன் பதிவு அறிமுகமாகிறது.

இது குறித்து, தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் உள்ளன. அவற்றில், இளநிலை பட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்க உள்ளது. வரும் 10ம் தேதி வரை, www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதளங்கள் வழியே, மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.ஒரு கல்லுாரிக்கு விண்ணப்பிக்க, 48 ரூபாய் விண்ணப்ப கட்டமாகவும்; 2 ரூபாய் பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது; 

பதிவு கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணத்தை, ஆன்லைன் பண பரிவர்த்தனை வழியே செலுத்தலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக, மாநிலம் முழுதும் மாணவர் சேர்க்கை வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் முகவரிகள், மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.அந்த முகவரிகளில் உள்ள மையங்களுக்கு மாணவர்கள் சென்று, கொரோனா வழிகாட்டு முறையை பின்பற்றியும் விண்ணப்பிக்கலாம்.அங்கு, வங்கி வரைவோலை அல்லது ரொக்கமாக பதிவு மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். 

 மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு, 044- - 2826 0098, 2827 1911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இன்ஜி., கவுன்சிலிங் பதிவு இன்று துவக்கம்பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசின் சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

அரசு மற்றும் தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர, தமிழக அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்க உள்ளது.விண்ணப்ப பதிவுக்கான ஆன்லைன் தளங்களின் விபரங்கள், தரவரிசை வெளியாகும் தேதி, கவுன்சிலிங் தேதி போன்றவற்றின் பட்டியல், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் இன்று வெளியிடப்பட உள்ளன.

No comments:

Post a Comment