தமிழ்நாட்டில் இருக்கும் 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் கடந்த ஆண்டுகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இவற்றில் ஏற்கனவே 14 உறுப்பு கல்லூரிகளில் அரசால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மீதம் உள்ள 27 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் 2021-22-ம் கல்வியாண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை அரசே மேற்கொள்ள இருக்கிறது. இந்த 27 கல்லூரிகளிலும் அரசின் பிற கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படுவது போன்றே, ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், 27 கல்லூரிகளும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post