என்ஜினீயரிங், கலை கல்லூரிகளில் 9-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Thursday 29 July 2021

என்ஜினீயரிங், கலை கல்லூரிகளில் 9-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகிற 9-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறை சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

 அண்ணா பல்கலைக்கழகத்தில் இருப்பதை போல, மற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறை கணக்கிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. அதை பரிசீலித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்படும். ஒற்றை சாளர முறையில் நடந்து வரும் என்ஜினீயரிங் விண்ணப்பப்பதிவில் நேற்று (நேற்று முன்தினம்) வரை 41 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். 

அதேபோல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 1 லட்சத்து 26 ஆயிரத்து 748 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 102 இடங்கள் தான் இருக்கின்றன. அந்தந்த கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்படும். எந்த கல்லூரிகளில் சேர விரும்புகிறார்களோ? அந்த கல்லூரிகளுக்கும் நேரடியாக சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 ஆன்லைன் வகுப்புகள் கல்லூரிகள் திறப்பது பற்றி முதல்-அமைச்சரோடு பேசிய பிறகு அறிவிக்கப்படும். 75 சதவீத கல்வி கட்டணத்தைத்தான் தனியார் கல்லூரிகள் பெற வேண்டும். அந்த விதியும் அமல்படுத்தப்பட உள்ளது. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற மாணவர்களுக்கு வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கப்படும். 

 அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் 2-வது செமஸ்டரில் தோல்வி அடைந்தால், அடுத்த செமஸ்டர் வகுப்புகளை தொடர முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அந்த நடவடிக்கையை மாற்றி அமைக்க பரிசீலிக்க உள்ளோம். எல்லா கல்லூரிகளிலும் ஒரே நடைமுறை தான் பின்பற்றப்பட வேண்டும். அது செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment