கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 3.50 லட்சம் ரூபாயில், பள்ளி முழுதும் 60 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில், 1980 முதல், 2019ம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் பலர், அரசு துறைகளிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். கூடுதல் வசதிகள்இவர்கள் ஒன்றிணைந்து, தாம் படித்த பள்ளிக்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும் என, தீர்மானித்தனர்.
இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்ற முன்னாள் மாணவர்கள், வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், அலுவலகம் மற்றும் நுாலகம் உட்பட, பள்ளி முழுதும் கண்காணிக்கும் வகையில், 60 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். பள்ளியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சம்பவங்களை நேரில் பார்க்கும் வகையில், தலைமை ஆசிரியர் அறையில், காணொளி திரையும் அமைக்கப்பட்டுள்ளது.கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் பள்ளிகளில் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரையும், மாணவர்களையும் கண்காணிக்கலாம்.


Post a Comment

أحدث أقدم