2020-ம் ஆண்டில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா என நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளித்தார்.
அப்போது அவர், “அப்படி ஒரு திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை” என தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பதில் அளிக்கையில், கடந்த ஆண்டு பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதி பதவிக்கு 80 பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் (மூத்த நீதிபதிகள் குழு) பரிந்துரைத்ததாகவும், 45 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்கள் பல்வேறு கட்ட பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Post a Comment