சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்றிதழ் ஆகியவற்றை விண்ணத்துடன் இணைக்க வேண்டும். தேர்வு செய்பவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் ரூ.500 மருத்துவப்படி அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم