தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிலேயே (2021-22) மாணவா்கள் சோ்க்கை நடைபெறும் என மாநில மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு கூறினாா். ராமநாதபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: 
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளில் மட்டும் 1,500 மாணவா்கள் நடப்புக் கல்வியாண்டில் சோ்க்கப்படவுள்ளனா். மத்திய மருத்துவக் குழு ஓரிரு வாரங்களில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆய்வை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவா்களுக்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் அனைவரும் தயாராக உள்ளனா்.அதன்படி புதிதாக 170 மருத்துவா்கள், 212 செவிலியா்கள், 145 மருத்துவமனை ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், தேவைப்படும் காலிப்பணியிடங்களையும் கலந்தாய்வு மூலம் நிரப்பவுள்ளோம் என்றாா். ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதன்மையா் எம்.அல்லி, கண்காணிப்பாளா் மலா்வண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Post a Comment

Previous Post Next Post