புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள், அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக, நோடல் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 

ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களும், சொற்ப நாட்களே பள்ளிக்கு சென்றனர்.பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, உரிய சமூக இடைவெளி பின்பற்றி, புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. இதேபோல், வரும் கல்வியாண்டிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில் வேகமாக தொற்று பரவி வருவதால், புத்தகங்களை பள்ளிக்கு கொண்டு வருதல், மாணவர்களுக்கு விநியோகித்தல் போன்ற செயல்பாடுகளை, தற்போது மேற்கொள்ள உத்தரவிட கூடாதென, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, முன்கூட்டியே மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதை பாதுகாப்பாக வைத்துள்ளோம். தொற்று வேகமாக பரவுவதால், அரசின் உத்தரவை மீறி, களப்பணிகள் மேற்கொள்ள முடியாது. தொற்று வீரியம் குறைந்த பிறகே, புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

Post a Comment

أحدث أقدم