தேர்வு கட்டணம் செலுத்த இன்ஜி., கல்லூரிகளுக்கு கெடு 

'இன்ஜினியரிங் மாணவர்களுக்கான ஏப்ரல், மே செமஸ்டர் தேர்வுகளுக்கு, வரும் 12ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்' என, பொறியியல் கல்லுா ரிகளுக்கு அண்ணா பல்கலை உத்தரவிட் டுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுா ரிகளில், பிப்., மற்றும் மார்ச் மாத செமஸ்டர் தேர்வு, அரசின் உத்தர வுப்படி மறு தேர்வாக நடத்தப்படுகிறது. 

MOST READ 

இதற்கு மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணம் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஏப்ரல், மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு அறிவிப்பையும், அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களின் விபரங்களை வரும் 7ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு, கல்லுாரிக ளுக்கு அண்ணா பல்கலை தேர்வுத்துறை அறி வுறுத்தி உள்ளது. மேலும், மாணவர்களிடம் இந்த தேர்வுக்கான கட்டணத்தை வசூலித்து, வரும் 12ம் தேதிக்குள் தேர்வுத் துறையில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Post a Comment

أحدث أقدم