ஆசிரியர் காலிப்பணியிடம் விவரம் திரட்டும் கல்வித்துறை 

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங் கள் கடந்த இரு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் பல பணி யிடங்கள் காலியாக உள்ளது. ஏற்கனவே, 3 ஆயிரம் பணியிடங்கள் காலி யாகி இருந்த நிலையில், தற்போது மேலும் அதி கரித்துள்ளது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்து, பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதால், அதற் குள் காலிப்பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பாட வாரியாக கேட்கப்பட்டுள்ளன. இதற்கென படி வங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் காலிப்பணியிட விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்,' என்றனர்.

Post a Comment

Previous Post Next Post