விமானப்படையில் பட்டதாரிகளுக்கு வேலை
இந்திய விமானப்படையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் அல்லாத பிரிவுகளில் 334 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்கள், பெண்கள் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். 60 சதவீத தேர்ச்சியுடன் பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எழுத்து தேர்வு, உளவியல் சோதனை, மருத்துவ சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-6-2021. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, உயரம், உடற்தகுதி உள்ளிட்ட விரிவான விவரங்களை https://afcat.cdac.in/AFCAT/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
إرسال تعليق