யுபிஎஸ்சி சிவில் சர்வீஸின் 2020க்கான நேர்முகத் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும், இதற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றப்படும் என யுபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜூன் 27ஆம் தேதி நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் அக்டோபர் 21க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post