சென்னையில் பழங்கள், காய்கறிகள், முட்டை, ரொட்டிகள் ஆகியவை ஒரு டன் கொள்ளளவு கொண்ட 2,700 வாகனங்கள் மற்றும் 11 ஆயிரம் சிறு வண்டிகள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையாளர்கள் குறித்த விபரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/vegsales என்ற இணையதளம் மற்றும் ‘நம்ம சென்னை’ செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம். 94999 32999; 044-4568 02200 ஆகிய எண்களில் விற்பனை குறித்து புகார்களையும் தெரிவிக்கலாம். மேலும் காய்கறி, மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட உள்ளது. 

இதற்காக பிரபல தனியார் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில் சென்னையில் தினமும் காய்கறி விலை குறித்த விபரங்களை மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/veg-pricelist என்ற இணையதளத்தில் தினமும் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 32 வகையான காய்கறிகளின் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச விலை உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 

இவை கோயம்பேடு மொத்த விலை பட்டியல் என்பதால் பொதுமக்களின் விற்பனையின்போது சற்று விலையேற்றம் இருக்கலாம். குறிப்பிட்ட அளவை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Post a Comment

أحدث أقدم