கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரம் பதிவேற்றம் செய்ய கோரிக்கை 

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை மாநில அர சுகள், யூனியன் பிரதேசங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகள் குறித்து மத்திய மகளிர் மற்றும் பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்ட தகவ லைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இதைத் தெரிவித்துள்ளது. 

MOST READ 

பால் ஸ்வராஜ் என்ற வலைதளத்தில் கரோனா வால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவ ரங்களை பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனி யன் பிரதேசங்களின் முதன்மைச் செயலர்களுக்கு அந்த ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் குழந்தைகளுக்கு நிவாரண உதவி அளித்து பராமரிக்க வேண்டும் என்றும் ஆணை யம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post