சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண் டர்களை சேர்க்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. 


கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளை யம், வால்பாறை, சூலுார் ஆகிய இடங்களில் உள்ள வட்ட சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு, சட்ட உதவி மற்றும் சட்டம் அறிவை, பாமர மக் களுக்கு எடுத்துரைக்க, சட்டம் சார்ந்த, 50 தன் னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. 

முற்றிலும் தற்காலிகமான இப்பணிக்கு, அடிப் படை சம்பளம் கிடையாது. சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் வழங்கப்படும். விண் ணப்பிக்கவிரும்புவோர், மேலும் தகவல் பெற, https://districts.ecourts.gov.in/coimbatore என்ற, மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

أحدث أقدم