இலவச 'பஸ் பாஸ்' விபரம் சேகரிப்பு 


தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கடந்த கல்வியாண்டு முழுதும் பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களின் இலவச பஸ் பாஸ் அட்டைகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் முன்கூட்டியே தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.


இது குறித்து போக்குவரத்து கழக நிறுவனங்களின் சார்பில் மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியே பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் 'இலவச பஸ் பாஸ் பெற உள்ள மாணவர்களின் பெயர் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை அனுப்ப வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post