பல்கலையில் மதிப்பூட்டிய பொருள் தயாரிப்பு பயிற்சி 


தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, வரும் 25,26 ஆகிய இரண்டு நாட்கள் அளிக்கப்படவுள்ளது. 


இப்பயிற்சியில், நெல்லி பானங்கள், பழரச பானம் மற்றும் தயார்நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், நெல்லி பொடி மற்றும் துருவல், தொழில் துவங் குவதற்கான உரிமம் பெறும் வழிமுறைகள் உள் ளிட்டவை குறித்து, நேரடி விளக்கங்கள் வழங் கப்படவுள்ளன. 


இரண்டு நாட்களும், காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள், ரூ.1,770 பயிற்சி கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். விபரங்களுக்கு, வேளாண்பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது, 0422-6611268 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post