இந்த ஆண்டு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு
 
பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு 2021 முதல் WEET ஆண்டுக்கு 4 முறையும், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வும் ஆண் டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்த ஆண்டு ஒரு முறை மட்டும் தான் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள் ளார். 


மக்களவையில் எழுத்து மூலமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், “2021ம் ஆண் டுக்கான மருத்துவ நுழைவு தேர்வான நீட் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்” என்றார். ஆண்டுக்கு இரண்டு முறை நீட் நுழைவு தேர்வு நடத்துவது குறித்து எந்த கருத்தையும் குறிப்பிடவில்லை.

Post a Comment

Previous Post Next Post