பாஸ்போர்ட் சேவைகளை பெற முன்பதிவு செய்ய வேண்டும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு 



கொரோனா முன்னெச்சரிக்கை வழிநாட்டு நெறிமுறைகளின்படி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு பாஸ்போர்ட் தொடர்பான பல்வேறு சேவைகளை பெறுவதற்காக வரும் விண்ணப்பதாரர்கள் முன்னதாகவே www.passportindia.gov.in என்ற இணையததளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 


இந்த இணையதளத்தில் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செவ்வாய்க்கிழமையை தவிர்த்து காலை 10 மணி முதல் 12.30 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வந்து சேவைகளை பெறுவதற்காக அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்கண்ட தகவல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post