தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு 


தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைவருக்கும் புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டுகளை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார். 


புகைப்படம் இல்லாத சீட்டு இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிஹாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- நடைபெறவுள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டை, புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 


5 நாட்களுக்கு முன்பு... வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைத்து வாக்காளர் தகவல் சீட்டையும் வினியோகிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post