வாரத்தில் 4 நாள்கள் மட்டும் பணி: மத்திய அரசு அலுவலகங்களில் அமல்படுத்தும் திட்டமில்லை 


புது தில்லி: 

மத்திய அரசு அலுவலகங்களின் வேலைநாள்களை வாரத்தில் 4 தினங்களாக குறைக்கும் திட்டமில்லை என்று மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் தெரிவித்தாா். 


இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்: மத்திய அரசு அலுவலகங்களின் வேலைநாள்களை வாரத்தில் 4 தினங்களாக குறைக்க அல்லது வாரத்தில் 40 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்தும் எந்த தீா்மானமும் மத்திய அரசிடம் இல்லை. 


மத்திய அரசு அலுவலகங்களின் வேலைநாள்கள், விடுமுறை தினங்கள், பணி நேரம் ஆகியவற்றை மத்திய ஊதியக் குழுக்கள் பரிந்துரைக்கின்றன. நான்காவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு அலுவலகங்களின் வேலைநாள்கள் வாரத்தில் 5 தினங்களாகவும், தினசரி எட்டரை மணி நேரம் பணிபுரிய வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. தற்போதுள்ள இந்த நிலையே தொடர வேண்டும் என ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது என்றாா் அவா்.

Post a Comment

Previous Post Next Post