டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு பணி 


 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் டிராப்டிங் ஆபீசர் (நெடுஞ்சாலைத்துறை-183), ஜூனியர் டிராப்டிங் ஆபீசர் (பொதுப்பணித்துறை-348), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், ஜூனியர் என்ஜினீயர் என மொத்தம் 537 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


 டிப்ளமோவில் சிவில் என்ஜினீயரிங், கட்டிடக்கலை, கைத்தறி தொழில்நுட்பம், ஜவுளி உற்பத்தி போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-4-2021. எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 6-6-2021. மேலும் விரிவான விவரங்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post