ஏப்ரல்10ம் தேதி முதல் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வு | கால அட்டவணை வெளியீடு
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கி யல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறு வது வழக்கம். கரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு இத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. 2021-ம் ஆண்டுக்கான தொழில் நுட்பத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என தொழில்நுட்பக்கல்வித் துறை அண்மை யில் அறிவித்திருந்தது.
MOST READ IGNOU இக்னோ தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை மார்ச் 31 வரை நீட்டிப்பு
இந்நிலையில், தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, தேர்வுகள் ஏப்.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகின்றன. தட்டச்சு ஜுனியர் கிரேடு தேர்வுகள் 5 பேட்ச்களாகவும், சீனியர் கிரேடு தேர்வுகள் 4 பேட்ச்களாகவும் நடைபெறுகின்றன.
ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி, தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மார்ச் மாதம் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்க கத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in/site) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தொழில்நுட்பத் தேர்வுகள் தேர்வுவாரியத்தின் தலைவர் கே.விவே கானந்தன் அறிவித்துள்ளார்

إرسال تعليق