DSE பணியிடை பயிற்சி- பெங்களூர் (NIMHANS) - 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள பட்டதாரி ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோருதல்-Proceedings

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் 
நக, எண்.8761/வி2/இ1/2021நாள், 25.022021, 

பொருள்: 

பள்ளிக் கல்வி ஆசிரியர்கள் பணியிடை பயிற்சி- பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்ள 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோருதல்-சார்பு. 

பார்வை:

 சென்னை-9, தலைமைச் செயலகம், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை கடிதம் எண். 1853/SW8(1):2020-2 நாள்: 19.02.2021. 

பார்வையில் காணும் கடிதத்தில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை QUBE (6150 The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) SOT psychiatric social work துறையுடன் இணைந்து drug demand reduction program என்ற தலைப்பில் ஆளுமை திறனை வளர்ப்பதற்கான 3 நாட்கள் பயற்சியினை மேற்படி நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் உத்தேசமாக பிப்ரவரி இறுதி வாரத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200 ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரை செய்யக் கோரப்பட்டுள்ளது, இப்பயிற்சியானது 40 நபர்கள் கொண்டு நடத்தப்படவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ள ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1500/- பயணக் கட்டணமாக வழங்கப்படும் எனவும், பயிற்சியின் போது தங்குமிடமும் மற்றும் உணவும் மேற்படி நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது. 

அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து இணைப்பில் குறிப்பிட்ட படிவத்தில் விவரங்களை பூர்த்தி (as soft copy in excel filc) செய்து 27.02.2021 க்குள் இவ்வலுவலக வி2 பிரிவு மின்னஞ்சல் v2sec.tndse(@nic.in என்ற முகவரிக்கு அனுப்புமாறும், முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட தொகுப்பறிக்கையினை விரைவு அஞ்சல் மூலம் அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.



Post a Comment

Previous Post Next Post