DEE - EMIS இணையதளம் - மாணவர் விவரங்களை உள்ளீடு செய்தல் மற்றும் காலமுறைதோறும் விவரங்களை புதுப்பித்தல் Director Proceedings
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு
பொருள் :
பார்வை :
தொடக்கக் கல்வி - கல்வி தகவல் மேலாண்மை முறைமை
(EMIS)- இணையதளம் - மாணவர் விவரங்களை உள்ளீடு
செய்தல் மற்றும் காலமுறைதோறும் விவரங்களை புதுப்பித்தல்
சார்ந்து.
1. அரசாணை (1டி) எண்.273, வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மை (பே.மே.4)த்துறை, நாள்.13.08.2020
2. சென்னை - 6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள்,
ந.க.எண். 04577 | ஜெ2 / 2020 நாள்
13.08.2020 மற்றும் 03.09.2020.
கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் மாணவர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள்
தொடர்பான விவரங்கள் சார்ந்த பள்ளிகளின்
தலைமையாசிரியர் / ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்து பராமரிக்கப்பட்டு நடைமுறையில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்
பள்ளிகள் தொடர்பான இந்த விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை
இணையதளத்தில் காலமுறைதோறும் புதுப்பிக்கப்பட (Update) வேண்டும் என அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
ஒவ்வொரு வட்டாரக் கல்வி அலுவலரும் தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளின்
விவரங்கள், காலமுறைதோறும் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்/ ஆசிரியர்களால்
சரியாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றதா என்பதை கண்காணித்திடல் வேண்டும்.
மேலும், வட்டார
வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் ஒன்றியத்தின் EMIS ஒருங்கிணைப்பாளர்களுடன்
வட்டாரக் கல்வி அலுவலர்கள் இணைந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்/ ஆசிரியர்களால்
புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் நடைமுறையில் உள்ள தகவல்கள்/ விவரங்களுடன் ஒத்திசைவாக
இருக்கின்றதா என்பதை கூர்ந்தாய்வு செய்திடல் வேண்டும்.
தவறான தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டு இருந்தால் அவை நீக்கம் செய்யப்பட்டு
சரியான தகவல்கள் இடம்ப
[1:30 PM, 2/25/2021] ♏iller: ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வட்டாரக் கல்வி அலுவலர்களால் வழங்கப்பட
வேண்டும்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25
சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை ஆகும்
மாணவர்கள் விவரம், அரசின் நலத்திட்டங்களுக்கு
தேவைப்படும் தேவைப் பட்டியல்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்ந்த விவரங்கள்
மற்றும் பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்து விவரங்களும்
கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் இருந்தே நேரடியாக எடுத்துக்
கொள்ளப்பட்டு விவரங்கள் உயர் அலுவலர்களால் வரும் நாட்களில் கையாளப்பட உள்ளது.
எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான விவரங்கள் கல்வி
தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் முறையாக புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில்
இருந்திடல் வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி
அலுவலர்கள் வாயிலாக சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை
வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக் கல்வி இயக்குநர்
24.92
பெறுநர்
1) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
2) அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்
3) அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக
நகல்
1) ஆணையர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-6
தகவலுக்காக பணிந்து
2) மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனுப்பலாகிறது
சென்னை-6)



Post a Comment