மனைப்பிரிவு வரன்முறை: விதியை திருத்தியது அரசு - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Monday 22 February 2021

மனைப்பிரிவு வரன்முறை: விதியை திருத்தியது அரசு

மனைப்பிரிவு வரன்முறை: விதியை திருத்தியது அரசு 


புதிய மனைப்பிரிவுகளில், அடிப்படை வசதிகளுக்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள் வரன்முறைக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், புதிதாக மனைப்பிரிவுகளை உருவாக்குவோர், முறையாக அடிப்படை வசதிகளை செய்யாமல் விடுவது வழக்கமாக உள்ளது. 

இதனால், அங்கு மனைகள் வாங்குவோருக்கு, முறையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. எனவே, புதிய மனைப்பிரிவுகளை உருவாக்கும் போதே, சாலை அமைப்பது, குடிநீர் வடிகால், மின் கம்பங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்துவதை, அரசு கட்டாயமாக்கி உள்ளது. இந்த வசதிகள் முறையாக செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் திருப்தி அடையும் நிலையில் தான், அங்கீகாரம் வழங்கப்படும். 

 இந்நிலையில், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்வதிலும், இப்புதிய விதியை சேர்க்க அரசு முடிவு செய்து உள்ளது.இதற்காக, 2017 தமிழ்நாடு அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறை விதிகளின், 10வது பிரிவில், புதிய கட்டுப்பாடு சேர்க்கப்பட்டுள்ளது.அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில், உரிய அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே, வரன்முறைக்கு அனுமதி கிடைக்கும். இதற்கான திருத்த விதியை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பிறப்பித்துள்ளது.

2 comments:

  1. அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப் படுத்தும் திட்டத்தைக் குறித்த கால அளவுக்குள் முடக்காமல் நிரந்தரமாக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அனுமதியற்ற மனை வரன்முறைக்கு கால அளவு ஏதும் இருக்கக்கூடாது. இதனால் நிறையப்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.20-10-2016க்குள் முறைப்படி பதிவு செய்த ஆவணங்களுக்கு மட்டுமே இது பொருந்துவதால் மனை வரையறைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நிர்ணயிப்பதால் ,இது குறித்த விழிப்புணர்வு இல்லாத பொதுமக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்திகக நேரிடுகிறது.இது குறித்து அரசு நடவடிக்கை எதிர்பார்க்கும் பொதுமக்கள்.

    ReplyDelete