தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி கணக்கு அலுவலர் வேலை 
மின்சார வாரியம் மிழ்நாடு மின்வாரியத்தில் 18 உதவி கணக்கு அலுவலர் வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தகுதி: சிஏ அல்லது ஐசிடிபிள்யூஏ முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:  1.7.2021 அன்று பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30க்குள். பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. இட ஒதுக்கீட்டு பிரிவைச் சாராத மாற்றுத்திறனாளிகள் 40 வயதுக்குள்ளும், முன்னாள் ராணுவ வீரர்கள் 48 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 2000. பட்டியலின மற்றும் பழங் குடியினருக்கு 1000, அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ₹1000. இதை கனரா வங்கி அல்லது இந்தியன் வங்கி அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் செலுத்தலாம். 


மேலும் பொது விவரங்கள், தகுதிக்கான நிபந்தனைகள், தேர்வு முறை, காலி பணியிடங்களின் இனவாரியான எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை, தடையின்மை சான்றிதழ், ஏனைய முக்கிய அறிவுரைகள் உள்ளிட்ட விரிவான விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.tangedco.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.3.2021. கட்டணம் செலுத்த கடைசி நாள்: &19.3.2021. 


Post a Comment

أحدث أقدم