தொழில் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு
என்.சி.வி.டி., எனப்படும், தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும், அகில இந்திய தொழில் தேர்வில், தனித்தேர்வர்களாக பங்கேற்க, தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்ப படிவம், முழு விபரங்கள் அடங்கிய, விளக்க குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் விபரங்களை, www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணம், 200 ரூபாய் செலுத்தியதற்கான ரசீது, கல்விச்சான்றிதழ் நகல், இதர ஆவணங்களின் நகல்கள் போன்றவற்றை இணைத்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மார்ச், 15க்குள், அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment