தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணி 


தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் (சிவில் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பொறி யியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்- (சிவில்) மற்றும் தொழில்நுட்பம் (சிவில்) பிரிவில் முழு நேர படிப்பு மற்றும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இந்தக் கல்வித் தகுதிகள் அனைத்தும் 10ம் வகுப்பு/ மேல்நிலைக் கல்வி தகுதி/பட்டயம்/இளங்கலை பட்டம் என்ற வரிசைப்படி முறைக்கேற்றவாறு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்தோ அல்லது கல்வி நிறுவனத்தி லிருந்தோ பெறப்பட்டதாக இருக்க வேண்டும். வயது வரம்பு: 1.2.2021 அன்று 21 முதல் 30க்குள். பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 32க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 40க்குள்ளும் இருக்க வேண்டும். 

மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sipcot.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: & 20.3.2021.



Post a Comment

أحدث أقدم