தொடக்கக் கல்வி /BEO பதவி உயர்வு கலந்தாய்வு மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைக்கப்படுகிறது. -தொடக்கக் கல்வி இயக்குநர் -PROCEEDINGS
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறையில் கூறப்பட்டுள்ளதாவது
பார்வை (2)ல் காணும் செயல்முறைகளின் படி, தொடக்கக் கல்வி இயக்கக
நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பதவி
உயர்வுக்கான கலந்தாய்வு 27.02.2021 மற்றும் 28.02.2021 ஆகிய நாட்களில் நடத்திட
அறிவுரைகள் மற்றும் அட்டவணையுடன் வெளியிடப்பட்டு இருந்தது.
சென்னை உயர் நீதிமன்ற
மதுரைக் கிளையில், வட்டாரக் கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு, நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் தொடக்கப் பள்ளி
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைக்கால தடை ஆணை
வழங்கப்பட்டுள்ளது.
எனவே, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு, பட்டதாரி
ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி
உயர்வு கலந்தாய்வு சார்பான அனைத்து நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை
நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதே போன்று 26.02.2021 அன்று நடைபெறவிருந்த வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் இடைக்கால தடையாணையின் காரணமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


إرسال تعليق