Sports and Physical Education பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின்படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் பெறுதல் SPD Proceedings


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், 
சென்னை - 600 006 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 
ந.க. எண். 2469 / 06/ SS/ 2020, 
நாள்: 18.01.2021 

பொருள் 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21 ஆம் கல்வியாண்டு விளையாட்டு மற்றும் உடற்கல்வி - Sports and Physical Education பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின்படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் பெறுதல் - சார்பு. 

பார்வை : 
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, திட்ட ஏற்பளிப்புக் குழு கடிதம் எண். F. No. 28-2/2020-159, நாள் 15.07.2020, (வ. எண்- 138, 139 ) 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/- வீதமும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10,000/- வீதமும், உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.25,000/ வீதமும் மத்திய கல்வி அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக (1 முதல் 5 வகுப்பு வரை, 6 முதல் 8 வகுப்பு வரை, 9 முதல் 12 வகுப்பு வரை) கொள்முதல் செய்யப்பட வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் அடங்கிய MGE ( Minisry of Educatian) Guideline அனுப்பப்படுகிறது . எனவே பள்ளிகளுக்குத் தேவையான ( ஏற்கனவே உள்ள விளையாட்டு உபகரணங்களை தவிர்த்து) - Guiddine ல் கொடுக்கப்பபட்டுள்ளவாறு விதிகளுக்கு உட்பட்டு கொடுக்கப்பட்டுள்ள தொகைக்குள் பள்ளிகள் தங்களுக்குத் தேவையான, SMC/SMDC தீர்மானத்தின்படி தற்போது கொள்முதல் செய்ய தீர்மானித்துள்ள விளையாட்டு உபகரணங்களின் பெயர்ப்பட்டியலை (எண்ணிக்கையுடன்) சரியாக ஏற்கனவே அனுப்பியுள்ள Google படிவத்தில் பூர்த்தி செய்து 18.01.2021 - க்குள் அனுப்பிடவும் 

மேலும் பள்ளிகள் கொள்முதல் செய்ய தீர்மானித்துள்ள விளையாட்டு உபகரணங்களின் பெயர்பட்டியலை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யவும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும் பள்ளி வாரியாக கொள்முதல் செய்ய தீர்மானித்துள்ள விளையாட்டு உபகரணங்களின் மற்றும் எண்ணிக்கை விவரங்களை தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட பட்டியலை ஒன்றியம் (வட்டார வள மையம் ) வாரியாக பெற்று மாவட்ட அளவில் தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட படிவத்தை San செய்து 22.01.2021 - க்குள் அனுப்பும்படி அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மாநில திட்ட இயக்குநர்

Post a Comment

أحدث أقدم