Ministry of Tribal Welfare purchasing Khadar clothes for school children பள்ளி மாணவர்களுக்காக கதர் துணிகளை வாங்கும் பழங்குடியினர் நல அமைச்சகம் 


 புதுடெல்லி: 

பள்ளி மாணவர்களுக்காக ரூ.14.7 கோடி மதிப்புள்ள கதர் துணிகளை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் வாங்கவுள்ளது. இதுதொடர்பாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏகலைவா உறைவிடப் பள்ளிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில்i பயிலும் மாணவர்கள் உடுத்துவதற்காக கதர் துணிகளை வாங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

இதற்காக ரூ.14.7 கோடி மதிப்புள்ள கதர் துணிகளை வாங்க காதி மற்றும் குடிசைத் தொழிலக ஆணையத்துடன் (கேவிஐசி) அமைச்சகம் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளது. 6 லட்சம் மீட்டர் கதர் துணிகள் இதன்மூலம் வாங்கப்படும். இந்தத் துணிகள் அனைத்தும் ஏகலைவா பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஏகலைவா பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதால் கதர் துணிகளை கொள்முதல் செய்வதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

Post a Comment

Previous Post Next Post