லேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும்போது 10 இலக்க எண்களுக்கு முன் பூஜ்ஜியம் சேர்க்க வேண்டியது நள்ளிரவு முதல் கட்டாயமாகிறது.
சிம்கார்டு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு போதுமான எண்கள் இருப்பை உறுதி செய்யும் வகையில் புதிய நடைமுறையை தொலைதொடர்புத்துறை அண்மையில் அறிவித்தது.
கடந்த 1ம் தேதிக்குள் இதற்கான மாற்றங்களை செய்யும்படி லேண்ட் லைன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, ஜனவரி 15ம் தேதி முதல் லேண்ட்லைன் எண்களில் இருந்து செல்போனுக்கு அழைப்புகளை மேற்கொள்ள, எண்களுக்கு முன் பூஜ்ஜியம் சேர்க்கவேண்டும்.
லேண்ட் லைனில் இருந்து மற்றொரு லேண்ட்லைன் எண்ணுக்கு அழைப்பதில் எந்த மாற்றமும் இல்லை.

إرسال تعليق