கல்லூரி வளாகத்தில் உள்ள குறைகளை ‘வாட்ஸ்-அப்'பில் பதிவேற்றக்கூடாது பணியாளர்களுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை 

 கல்லூரிக கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) நா.ராமலட்சுமி, அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசு கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களின் குறைகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் கல்லூரி வளாகம் மற்றும் அலுவலகத்தில் உள்ள குறைகளை வாட்ஸ்-அப் குழுவில் பதிவேற்றம் செய்யக்கூடாது. இந்த குறைகள் தொடர்பாக அதைச் சார்ந்த மேல் அலுவலர்களிடம் முறையிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதனை பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு கடைப்பிடிக்காதவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم