தபால் துறை தேர்வை தமிழில் எழுதலாம்: மத்திய அரசு 


 புதுடில்லி: தபால்துறையில் உள்ள கணக்காளர் வேலைக்கான தேர்வை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தபால் துறையில் உள்ள கணக்காளர் வேலைக்கான தேர்வுகள் வரும் பிப்., 14ம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றது. தமிழ் மொழி இடம்பெறவில்லை. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் மொழியில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிப்., 14ம் தேதி நடைபெற உள்ள தபால் தேர்வை ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன் தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post