எல்ஐசி பாலிசிக்கான தொகையை மின்னணு முறையில் செலுத்தலாம் 


பாலிசிதாரர்கள் தாங்கள் புதிதாக எடுக்கும் பாலிசிக்கான தொகையை ஆன்லைன் மூலம் மின்னணு முறையில் செலுத்துவதற்கான புதிய வசதியை எல்ஐசி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்படி, சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ், ‘ஆனந்தா’ என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.அதன்படி வாடிக்கையாளர்களிடம் முகவர் கள் பாலிசிகளை விற்பனை செய்யும்போது அதற்கான ஆவணங்களை மின்னணு முறையில் பெற முடியும். இதன்மூலம், காகித பயன்பாட்டின் தேவை குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செயலியில் கூடுதல் வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது. புதிய பாலிசிகளுக்கான தொகை அதன்படி, பாலிசிதாரர்கள் தாங்கள் எடுக்கும் புதிய பாலிசிகளுக்கான தொகையை டெபிட், கிரெடிட், நெட்பேங்கிங், யுபிஐ ஆகியவை மூலம் மின்னணு முறையில் செலுத்தலாம். இதனால், முகவர்களும் பாலிசிதாரர்களிடம் இருந்து எளிதாக பாலிசிக்கான தொகையை மின்னணு முறையில் பெறலாம். இந்த சேவையை எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்.ஆர்.குமார் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்கள் டி.சி.சுஷீல் குமார், விபின் ஆனந்த், முகேஷ் குப்தா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

Post a Comment

أحدث أقدم