சென்னை:
கொரோனா பாதிப்பால், வனக் காப்பாளர் பணி சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர முடியாதவர்களுக்கு, கூடுதல் வாய்ப்பு வழங்க, வனத் துறை முடிவு செய்துள்ளது.
வனத் துறையில், 320 வனக் காப்பாளர் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, 2020 மார்ச்சில் நடந்தது. ஊரடங்கால் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் தடைபட்டன. இந்நிலையில், ஜன., 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
கொரோனா பரிசோதனையில், 'நெகட்டிவ்' முடிவு வந்தவர்கள் மட்டுமே, இதில் அனுமதிக்கப் பட்டனர்.கொரோனா தொற்று பாதித்தவர்களால், பங்கேற்க முடியாமல் போனது. இவர்கள், ஜன., 18ல், சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் உள்ள, வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அலுவலகத்துக்கு நேரில் வரலாம்.அங்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என, வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

إرسال تعليق