எந்த அதிகாரிகளுக்கு பணி?; தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு 


 புதுடில்லி: 'இதற்கு முன் தேர்தல் பணியின்போது சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு, தேர்தல் தொடர்பான எந்த பணியையும் வழங்கக் கூடாது' என, தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி சட்டசபைகளுக்கு, ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில், இந்த மாநில அரசுகளின் தலைமை செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாவது:இதற்கு முன் நடந்த தேர்தல்களின்போது, சரியாக செயல்படாத அதிகாரிகள் மற்றும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள அதிகாரிகளுக்கு, வரும் சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் தொடர்பான எந்த பணியும் வழங்கக் கூடாது. அதேபோல், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ள அதிகாரிகளையும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடக்க உதவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post