புதிய தொடக்கப் பள்ளிகள் பெயர்ப் பட்டியல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் அனுப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், 

சென்னை - 600 006.

ந.க.எண்.020989/ கே4/ 2019, நாள் 8.01.2021

பொருள்:

தொடக்கக் கல்வி - 2020 - 21ஆம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல் மற்றும் 10 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டது - புதிய தொடக்கப் பள்ளிகள் பெயர்ப் பட்டியல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் அனுப்புதல் - புதிய தொடக்கப் பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான பணியிடங்களை இயக்குநர் பொது தொகுப்பில் உள்ள உபரி பணியிடங்களை மாற்றி ஆணை வழங்குதல் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தக்க அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து.

1. தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.020989 / கே4 / 2019 நாள். 11.05.2020 மற்றும் 27.08.2020 அரசாணை (நிலை) எண்.134 பள்ளிக் கல்வித் (அகஇ) துறை, நாள் 28.12.2020 

3. இவ்வியக்கக இ பிரிவிலிருந்து பெற்ற அலுவலக குறிப்பு ப.வெ.எண். 22725 / இ1 /2020 நாள். 07.01.2021ன்படி இயக்குநர் பொதுத் தொகுப்பிலிருந்து உபரி பணியிடங்களை புதிய / தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு மாற்றி வழங்குவது தொடர்பான குறிப்புரை.

பார்வை:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 13.03.2020 அன்று கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. "வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்குதேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்".

பார்வை-2ல் காணும் அரசாணையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் -------------------------------

இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட உபரிபணியிடங்களிலிருந்து நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, புதியதாக தொடங்கப்படும் 25 தொடக்கப் பள்ளிகளுக்குத் தேவையான 25 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 25 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட ஆசிரியரின்றி உபரியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை இணைப்பு -1ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் 10 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி தலைமையாசியர் ( நிலை 17 ரூ.36,700 -116200 ) மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் (நிலை 16, ரூ.36400 -115700) வீதம், 10 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தியும் , 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட உபரி உபணியிடங்களிலிருந்து இணைப்பு - 2ல் குறிப்பிட்டுள்ளபடி மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது. இவ்வாறு மாற்றி வழங்கப்படும் 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பாடவாரியான சுழற்சி முறையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் முதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும், அடுத்தடுத்து வரும் 2021-22 மற்றும் 2022-23ஆம் கல்வியாண்டுகளில் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் நிரப்பப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குவதற்கும் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் குறித்தும் கீழ்கண்டுள்ளவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

> புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் அவ்வொன்றியத்தில் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையில் பணியில் இளையோரை இடைநிலை ஆசிரியராக பதவியிறக்கம் செய்து அப்பணியிடத்திற்கு தற்போது தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியருக்கு மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

> தொடக்கப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் துறையால் நிரப்பப்படும் வரை வகுப்புகள் இயங்க ஏதுவாக ஒன்றியத்தில் உள்ள ஆசிரியருடன் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்டு மாற்றுப் பணியில் பணிபுரியத்தக்க வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

> புதியதாக அனுமதிக்கப்பட்ட பணியிட விவரங்களை மாவட்ட அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அளவைப் பதிவேட்டிலும் , கல்வி மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அளவைப் பதிவேட்டிலும், ஒன்றிய அளவில் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் அளவைப் பதிவேட்டிலும் மற்றும் சார்ந்த பள்ளிகளின் அளவைப் பதிவேட்டிலும் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அளவைப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி பார்வையின்போது உறுதி செய்தல் வேண்டும்.

- புதியதாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு அரசின் நலத்திட்டங்களான விலையில்லாப் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், பேருந்து பயண அட்டை, புத்தகப்பைகள், காலணிகள், கம்பளிச் சட்டைகள், கணித உபகரணப் பெட்டிகள், புவியியல் வரைபடங்கள் போன்ற அனைத்து நலத்திட்டங்களும் ----------------------------

மேற்காண் அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்குவதுடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் இவற்றை தவறாது கண்காணிக்க அறிவறுத்தப்படுகிறார்கள். மேலும், புதிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்ட விவரத்தினையும், தொடக்கப் பள்ளியினை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரத்தினையும்  படிவம் 1 மற்றும் 2ல் கண்டுள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறும் இச்செயல்முறைகள் பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதலை மறு அஞ்சலில் அனுப்பி வைக்குமாறும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு:

1. அரசாணை நகல் மற்றும் இணைப்பு 12

2. பணியிடம் வழங்கப்பட்ட விவரம் (இணைப்பு -1 மற்றும் 2)

3. படிவம் - 1 மற்றும் 2 தொடக்கக் கல்வி இயக்குநர்

பெறுநர்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரியலூர், செங்கல்பட்டு, தருமபுரி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர் மற்றும்

சேலம்,

நகல்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

கோயம்புத்துார், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி,

சிவகங்கை, நீலகிரி, கடலூர், அரியலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பூர், திருவாரூர்,

நாகப்பட்டினம்

(புதியதாக தொடங்கப்படும் 25 தொடக்கப் பள்ளிகளுக்கும், தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளுக்கும் இயக்குநர் பொதுத் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் 25 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், 25 இடைநிலை ஆசிரியர் மற்றும் 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தினை அளவைப் பதிவேட்டில் இருந்து (தொடர்ந்து பின்வருவனவற்றில் படித்து தெரிந்துகொள்ளவும்)













Post a Comment

أحدث أقدم