பெங்களூரு, ஜன. 16: கர்நாடக மாநில முன்னாள் படைவீரர் நலம்
மற்றும் மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்
கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக மாநில முன்னாள் படைவீரர் நலம் மற்றும்
மறுவாழ்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கர்நாடக மாநில முன்னாள் படைவீரர் நலம் மற்றும் மறுவாழ்வு
மையத்தின் இயக்குநராக பணியாற்றுவதற்கு ராணுவம், கப்பல்
படை, விமானப் படையில் கர்னல் அல்லது பிரிகேடியர் பதவி அல்
லது அதற்கு நிகராக வகித்த ஓய்வுபெற்ற, மறுபணியமர்த்தப்பட்ட,
சேவையில் உள்ள, நிரந்தரப் பணியில் உள்ள, பணி ஓய்வு ஆகக்கூ
டிய நிலையில் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்
கப்படுகின்றன. இப்பணிக்கு ரூ. 82 ஆயிரம் முதல் ரூ. 1,17,700 வரை
ஊதியம் அளிக்கப்படும்.
மறுபணியமர்த்தப்பட்டவர்கள் அல்லது பணியில் உள்ளோர்
தமது உயரதிகாரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பணி ஓய்
வுபெற்றோர்
இயக்குநர்,
கர்நாடக மாநில முன்னாள் படைவீரர்
நலம் மற்றும் மறுவாழ்வு மையம், பீல்டுமார்ஷல் கே.எம்.கரியப்பா
மாளிகை,
58, கே.எம்.கரியப்பா சாலை,
பெங்களூரு-560025
என்ற
முகவரி அல்லது dirdswrblr@gmail.com என்ற மின்னஞ்சலில்
பிப்.8-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

إرسال تعليق