ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை நாளை வரை விண்ணப்பிக்கலாம் 


கடலுார்; 

கடலுார் மாவட்டத்தில் அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர கால அவகாசம் நாளை 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2020-2021ம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை இணைய வழி கலந்தாய்வு மூலம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நாளை 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ேலும், அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்களை அறிய www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post