5 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை.. 


 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிந்திருக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15 வரை தொடரும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் குமரிக்கடல் பகுதியில் புதிய காற்றழ்ழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் " வளிமண்டல சுழற்சி காரணமாக மாலத்தீவு குமரிக்கடல் அருகே புதிய காற்றழுத்த நிலை உருவாகி உள்ளது. எனினும் இது மேலும் வலுப்பெற வாய்ப்பில்லை. தாழ்வு நிலையாகவே நீடிக்கும். இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும்.. திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் குமரிக்கடல், மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم