இந்த மாநிலத்தில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் 27-ந் தேதி திறப்பு; கல்வி மந்திரி அறிவிப்பு - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Saturday 16 January 2021

இந்த மாநிலத்தில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் 27-ந் தேதி திறப்பு; கல்வி மந்திரி அறிவிப்பு

இந்த மாநிலத்தில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் 27-ந் தேதி திறப்பு; கல்வி மந்திரி அறிவிப்பு 


 மராட்டியத்தில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை 27-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார். பதிவு: ஜனவரி 16, 2021 03:00 AM கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மராட்டியத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 9 முதல் 12 வரை இந்த மாத தொடக்கத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியது. எனினும் பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது. 

இதனால் மாநில அரசு அனுமதி வழங்கிய தேதியில் மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பின்னர் படிபடியாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் பல மாவட்டங்களில் திறக்கப்பட்டு விட்டன. மும்பை உள்ளிட்ட சில இடங்களில் இன்னும் அந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை. 5-ம் வகுப்பு முதல்... இந்தநிலையில் வருகிற 27-ந் தேதி முதல் 5 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:- வருகிற 27-ந் தேதி முதல் 5 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க முடியும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்து உள்ளேன். பள்ளிகளை திறக்கும் முன் மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் மாவட்ட அரசு டாக்டர்கள் கள நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்த போது ஆசிாியர்கள், ஊழியர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வளாகங்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டது. 

5 முதல் 8 வரை பள்ளிகளை திறக்கும் முன்பும் அவை கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மும்பையில் திறப்பு இல்லை இதற்கிடையே அடுத்த அறிவிப்பு வரும் வரை மும்பையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என மாநகராட்சி அறிவித்து உள்ளது. ஏற்கனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநகராட்சி அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. 2-வது கொரோனா அலை அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. 

அதே நேரத்தில் ஏற்கனவே அறிவித்தப்படி, 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. மராட்டியத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தாலும் இன்னும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 20-ந் தேதி முடிவு எடுக்கப்படும் என உயர் மற்றும் தொழில்கல்வி துறை மந்திரி உதய் சாமந்த் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment