உதவித்தொகை தேர்வு விண்ணப்பிக்க ஜன. 20 வரை அவகாசம் 


 எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு டிச. 28 முதல் ஜன. 8 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டை விட குறைந்த மாணவர்களே விண்ணப்பித்ததால் அதற்கான அவகாசம் வரும் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு பிப். 21ல் நடக்க உள்ளது.

Post a Comment

أحدث أقدم