ஏப்.18-இல் முதுநிலை மருத்துவ நீட் தோ்வு 


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. 

 நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30,000-க்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமாா் 4,000 இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் நீட் தோ்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் தேசிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடுமுழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எம்பிபிஎஸ் படித்து முடித்தவா்கள் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவா்கள். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை பாா்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று தேசிய தோ்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.


Post a Comment

أحدث أقدم