பள்ளிக் கல்வி - 19.01.2021 முதல் பள்ளிகள் திறந்து 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் செயல்பட ஆணை - மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!!!

இணைப்பு : தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநரின் கடிதம்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6ந.கஎண் : 34462 /பிடி11 1/2020 நாள்.13.01.2021

பொருள்:

பள்ளிக்கல்வி - 19.01.2021 அன்று முதல் பள்ளிகள் திறந்து10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் செயல்பட ஆணை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tabletவழங்குதல்- அறிவுரைகள் -சார்ந்து

அரசாணை எண் 30 மற்றும் 31 வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை நாள் 13.01.2021

2. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கடிதம் எண் (SCHL-EDU-DEO)(70)/M(P) TNMSC/ 2020 நாள் 13.01.2021

பார்வை :

1.

<<<>>>

பார்வை (1)- ல் உள்ள அரசாணைகளில் பள்ளிகள் 19.1.2021 அன்று திறக்கவும்

மற்றும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tablet சுகாதார துறையின் மூலம் பெற்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு 10 Multivitamin tablet மற்றும் 10 Zinc tablet மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். இம்மாத்திரைகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து பார்வை 2ல் உள்ள கடிதத்தில் மாவட்ட வாரியாக அரசு,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tablet வழங்க மாவட்ட வாரியாக விவரங்கள் இணைப்பில் அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் Warehouse சென்று அதன் பொறுப்பாளரிடம் மாத்திரைகள் பெற்றுக்கொள்ள, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அல்லது மூத்த தலைமையாசிரியர் ஒருவரை இப்பணிக்கு தனி அலுவலராக நியமிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய கேட்பு கடிதத்தினை தனி அலுவலர் மூலம் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் Warehouse பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பொறுப்பு அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலரால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் தங்கள் மாவட்டத்திற்கான Multivitamin tablet மற்றும் Zinc tablet யினை Warehouse -லிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அல்லது மூத்ததலைமையாசிரியர் மாத்திரைகளை Warehouse -லிருந்து பெறுவதற்கு உரிய வாகனத்துடன் (Transport facility) செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்பெறப்பட்ட மாத்திரைகளை கல்வி மாவட்ட வாரியாக பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து, மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்கள், பெறப்பட்ட மாத்திரைகளை எவ்வித காலதாமதம் இன்றி உரிய ஏற்பாடு செய்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப துரிதமாக செயல்பட்டு 18.01.2021 தேதிக்குள்வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வழங்கப்பட்ட மாத்திரைகளை மாணவர்கள் உட்கொள்ளும் முறையினைDD(Health) / அரசு மருத்துவர் அவர்களின் ஆலோசனைகள் பெற்று மாணவர்களுக்கு

பள்ளி தலைமையாசிரியர் மூலம் உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அல்லது மூத்ததலைமையாசிரியர்கள் உதவியாளரைக் கொண்டு Warehouse -லிருந்து பெறப்பட்ட மாத்திரைகள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளுக்கு கணக்குகளை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.

உரிய மேற்கண்ட அனைத்து பணிகளையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திட்டமிட்டு துரிதமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: பார்வை 2-ல் உள்ள கடிதம்


பள்ளிக் கல்வி இயக்குநர்

பெறுநர்

13-1

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

நகல்- அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச்

செயலகம், சென்னை - அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

நகல்- அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள், மக்கள் நல்வாழ்வு மற்றும்

பொதுசுகாதார துறை, தலைமைச் செயலகம், சென்னை -அவர்களுக்கு தகவலுக்காக

பணிந்து அனுப்பப்படுகிறது.

நகல்- இயக்குநர், பொது சுகாதாரம், தேனாம்பேட்டை, சென்னை அவர்களுக்கு

தகவலுக்காக அனுப்பப்படுகிறது

நகல்- மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ பணிகள் மற்றும் சேவை கழகம்,

சென்னை அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.









Post a Comment

Previous Post Next Post