மாதந்தோறும் ரூ.12,400: முதுகலைப் படிப்புகளுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி 


முதுகலைப் படிப்புகளுக்கான உதவித்தொகைக்குத் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை (பிப்.28) கடைசித் தேதி ஆகும். கேட் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை பொறியியல் (எம்.இ.), தொழில்நுட்பம் (எம்.டெக்.), கட்டிடக் கலை (எம்.ஆர்க்.), பார்மசி (எம்.ஃபார்மா) படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

 ஏஐசிடிஇ அளிக்கும் இந்த உதவித்தொகை திட்டத்துக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,400 வழங்கப்படும். இந்த உதவித்தொகை சரியாக 24 மாதங்களுக்கு வழங்கப்படும். அல்லது வகுப்புகள் தொடங்கி முடியும் நாள் வரை எது குறைவோ அதைக் கணக்கிட்டு வழங்கப்படும். உதவித்தொகை பெறும் மாணவிகள் அரசு விதிமுறைகளின்படி மகப்பேறு விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். 

அதேபோல ஒரு கல்வியாண்டுக்கு 15 நாட்கள் பொது விடுமுறை, 30 நாட்கள் மருத்துவ விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இந்த உதவித் தொகையைப் பெற மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை (பிப்.28) கடைசித் தேதி ஆகும். இது தொடர்பான தகவல்களைக் கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க மார்ச் 15-ம் தேதி கடைசி நாள் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. 

 கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க: https://www.aicte-india.org/schemes/students-development-schemes/PG-Scholarship-Scheme/General-instruction முழுமையான விவரங்களுக்கு: https://aicte-india.org/sites/default/files/sdc/PG_scheme_guidelines.pdf

Post a Comment

Previous Post Next Post