ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 


இந்திய விமான நிலைய ஆணையத்தில் புதிதாக 368 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 மொத்த காலியிடங்கள்: 368 

 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Manager (Fire Services) - 11 

பணி: Manager (Technical) - 02 சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 வயதுவரம்பு: 30.11.2020 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

 பணி: Junior Executive (Air Traffic Control) - 264 

பணி: Junior Executive (Airport Operations) - 83 

பணி: Junior Executive (Technical) - 08 சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 வயதுவரம்பு: 30.11.2020 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 

பொறியியல் துறையில் பையர், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், இயற்பியல், கணிதம் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி அனுபவம் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

 தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஓட்டுநர் சோதனை மற்றும் குரல் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 விண்ணப்பக் கட்டணம்:

ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.170 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பழகுநர் (Apprentices) கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

  விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்ட அறிவிப்பை தெளிவாக படித்த பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 15.12.2020 

 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2021 

 மேலும் விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

Previous Post Next Post